Header Ads



இன்றுமுதல் நீக்கப்பட்ட சில நடைமுறைகள்


முழுமையாக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விமானப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக 75 பயணிகள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பயணிகள் தேவையான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருப்பதை எழுத்து மூலமான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் என்று சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது. 

இதன்படி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டு 14 நாட்கள் நிறைவடைந்த பயணிகளை, அதிகபட்ச பயணிகளைக் கொண்ட விமானத்தில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளையும், விமானத்தில் ஆகக்கூடிய 75 என்ற பயணிகள் கட்டுப்பாடின்றி இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தடுப்பூசியின் முதலாவது டோஸ் அல்லது எந்தவொரு தடுப்பூசியும் வழங்கப்படாத பயணிகளை ஒரே விமானத்தில் 75 பேரை மட்டுமே அழைத்துவர முடியும். 

மேலும் அந்தப் பயணிகள் இலங்கைக்கு வந்ததன் பின்னர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைபபடுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.