Header Ads



கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மாத்திரம், பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை


இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்தில் பயணிப்பதில் சிக்கல் நிலை வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் மாத்திரம் பேருந்துகளில் பயணிக்க கூடிய முறை ஒன்றை தயார் செய்யுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகள் பயணிக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசிகள் இரண்டை பெற்றுக் கொண்டுள்ள நபர்கள் பேருந்துகளில் பயணிப்பதற்கு முன்னிரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக் கொண்ட நபர்களுக்கு பணம் செலுத்தி விரைவில் தற்காலிக அடையாள அட்டை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அடையாள அட்டைகளை சுகாதார பிரிவு அதிகாரிகளின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் மிகவும் நல்லதென அவர் கூறியுள்ளார்.

அடையாள அட்டைகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியு்ளளார்.

இதன்போது பயணக்கட்டுப்பாடு இருக்கும் போது அத்தியாவசிய சேவைகள் என்பது பிரச்சினை அல்ல. தடுப்பூசி அடையாள அட்டைகளை காண்பிக்கும் நபர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.