Header Ads



ஹிசாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது


நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று (30) காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது. 

சுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிசாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி உத்தரவிட்டிருந்தார். 

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பான முறையில் அனுப்புமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். 

கொழும்பில் இருந்து வருகைத்தந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹன்ஷா அபேவர்த்தன நேற்று (29) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிறுமி ஹிசாலியின் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றினை சமர்பித்ததை அடுத்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதின் வீட்டில் பணி புரிந்த டயகம தோட்டத்தை சேர்ந்த ஜுட் ஹிசாலின் என்ற சிறுமி கடந்த 03 ம் திகதி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி முறையில் உயிரிழந்தார்

இந்நிலையில் கொழும்பு நீதிமன்றம் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. 

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

1 comment:

  1. வாழ்க்கைச் செலவு உயர்வு, பொருளாதாரப்பிரச்சினைகள், மக்களின் நெருக்கடியை மூடிமறைக்கும் அரசாங்கத்தின் நாடகம் சிறப்பாக அரங்கேருகின்றது.இந்த நாட்டு மக்கள் முழுமடையன்களாக இருக்கும் வரை அரசியல் கொள்ளைக்காரர்களுக்குக் கொண்டாட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.