ஹிஷாலினியின் மரணம் - அரசியல் தலையீடு இன்றி, விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட முழு ஒத்துழைப்பை வழங்க தயார்
ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவர் தலதா அத்துகோரள தலைமையிலான அதன் உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹிஷாலினியின் மரணம், நாடு முழுலதும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆழமான கலந்துரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. எனவே இப்போதேனும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கோ அல்லது சட்ட மறுசீரமைப்புக்களை செய்வதற்கோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான புதிய சட்டங்களை உருவாக்கி அல்லது சட்டத்திருத்தங்களை செய்து, அவர்கள் வாழ்வதற்குகந்த சூழலை உருவாக்குவது அரசாங்கம் உள்ளடங்கலாக எம்மனைவரினதும் பொறுப்பாகுமென்றார்.
உங்க நாட்டுல உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க முடியாது.
ReplyDelete