“ஒரு தந்தையைப் போல கசப்பான விடயங்களை, சிலவேளைகளில் செய்ய வேண்டி வரும்" - பெசில்
ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் வழிநடத்தலில் சகல மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தமக்கு அவசியம் என தெரிவித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள அனைவருக்கும் என்ன பிரச்சினை என்பது குறித்து தெளிவு உள்ளது என்றார்.
“ஒரு தந்தையைப் போல கசப்பான விடயங்களை சிலவேளைகளில் செய்ய வேண்டி வரும். எனினும் அந்த விடயங்கள் நேர்மையாக மக்களுக்காக செய்யும் வேலைகளாக நாம் நினைக்கிறோம்” என்றார்.
நிதியமைச்சில் (08) தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“உங்களில் ஒருவர் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பதை கருத்திற் கொள்ளுங்கள் நாட்டு மக்களின் எண்ணப்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மீண்டும் செயற்படுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஸ்ரீ- லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவப்பதாக கூறிய அவர் மீனவர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் துறைசார் நிபுணர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கு எதிர்பார்ப்புக்களுக்கு முன்னுவரிமை வழங்கி அரசாங்கம் செயற்படும் என்றார்.
கடந்த காலங்களில் மக்களுடன் மக்களாக இணைந்து செயற்பட்டுள்ளேன். தற்போதும் அவ்வாறே மக்கள் மத்தியில் இருந்து செயற்படுவேன். நிதியமைச்சர் பதவி கிடைத்து விட்டது என்பதற்காக கொள்கைக்கு முரணாக ஒருபோதும் செயற்பட மாட்டேன் என்றார்.
இலங்கையின் 22 மில்லியன் மக்களின் வாப்பா வந்திருக்கின்றார்.இனியென்ன பிள்ளைகளுக்கு மங்களமும் சுபசோபனமும்தான்.
ReplyDelete