சஜித் தரப்புடன் நாம், இணைந்து கொள்ள மாட்டோம் - தயாசிறி
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்திற்குள் நெருக்கடிகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். அவற்றை நாம் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
ஒரு வருட காலமே அரசாங்கத்துக்கு கடந்து இருக்கின்றது. இன்னும் நான்கு வருடங்கள் காணப்படுகின்றன. எனவே இந்த காலப்பகுதியில் நாம் அனைவரும் இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு செயற்படுவதற்கு முயற்சிப்போம்.
அதற்காக நாம் சஜித் தரப்புடன் இணைந்து கொள்ள மாட்டோம். அவருடன் இணைந்து கொள்வதன் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து செயல்பட முடியும். ஆனால் அவர் உடனடியாக வந்ததுடன் பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்துவார் என்று கூறுவதை ஏற்க முடியாது.
அவ்வாறு கூறப்படுவது நகைச்சுவையாகும். காரணம் தற்போது கூட இந்த அரசாங்கத்தின் பலம் பொருந்தியவராகவே பசில் ராஜபக்ச காணப்படுகின்றார்.
அவர்தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையை நியமித்தவர். அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் பட்டியலிட்டவர் அவர்தான். எனக்கு பத்திக் அமைச்சை கொடுத்தது பசில் ராஜபக்சதான்.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்ததாக மிகவும் பலம் பொருந்தியவராக பசில் ராஜபக்சவே காணப்படுகின்றார். எனவே தற்போது இந்த நெருக்கடி நிலைக்கும் அவர்தான் பொறுப்பு கூற வேண்டும். அதாவது அவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
காரணம் தற்போதைய அரசாங்கத்தை இயக்குபவர் பசில் ராஜபக்சவாகவே இருக்கின்றார். எனவே அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதன் ஊடாக பாரிய மாற்றத்தை செய்வார் என்று கூறுவது நகைச்சுவையாகவே காணப்படுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். Tamilwin
Its good....dont cheat Sajith team too..For u UNP is OK
ReplyDelete