Header Ads



கிறிஸ்தவர்களை உபசரித்த முஸ்லிம்கள் - தேவாலயத்தையும் பள்ளிவாசலையும் இணைத்த சமாதான பாலம்


 - கயான் யத்­தே­ஹிகே -

மூன்று தசாப்­த­கால யுத்­தமும் பயங்­க­ர­வா­தமும் சந்­தேகம், வெறுப்­பு­ணர்வு மற்றும் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி மனி­த­நே­யத்தை இல்­லாமல் செய்­து­விட்­டது. இதன் விளை­வாக இன மற்றும் மத ரீதியில் பிள­வுகள் ஏற்­பட்­டன. ஒரு சமூகம் இன்­னொரு சமூ­கத்தை சந்­தே­கத்­துடன் பார்த்­தது. இன­வாத நோக்கம் கொண்ட சிலர் இதனை கையாண்­ட­தோடு, முரண்­பா­டு­க­ளையும் உரு­வாக்­கினர்.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மை­யற்ற தன்­மையை குறைப்­ப­தற்­காக யுத்­தத்தின் பின்­ன­ரான காலத்தில் பல்­வேறு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும், சாம்­பலின் கீழ் புகைந்­து­கொண்­டி­ருக்கும் தீப்­பொ­றியைப் போல இன­வாதம் புகைந்து கொண்­டி­ருந்­தது. அதனை பற்­ற­வைக்க ஒரு சிறிய சம்­பவம் போது­மா­னது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் சற்றும் எதிர்­பா­ராத வகையில் பயங்­க­ர­வா­தி­களால் ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று தொடர் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. சமூ­கங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பிய மற்றும் சந்­தே­கமும் அவ­நம்­பிக்­கையும் மீண்டும் சரி­செய்­யப்­பட்ட ஒரு சந்­தர்ப்­பத்­தி­லேயே இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

சில பயங்­க­ர­வாத குழுக்­களால் நடத்­தப்­பட்ட இத்­தாக்­கு­தல்­களின் பின்னர், நாட்­டி­லுள்ள சகல முஸ்லிம் மக்­களும் சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கப்­பட்­டனர். மற்றும் சந்­தே­கத்­துடன் நடத்­தப்­பட்­டனர். எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் மக்­களின் செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­காக சமூக ஊட­கங்­களை தடை­செய்­ய­வேண்­டிய நிலை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டது. முஸ்லிம் மக்­களின் கடை­க­ளுக்குச் செல்­வதை சிங்­கள மக்கள் நிரா­க­ரிக்கும் அள­விற்கு நிலைமை மோச­ம­டைந்­தது. சமூ­கங்கள் மீண்டும் பிரிந்­து­சென்­றன. ஒரு முக்­கி­ய­மான கட்­டத்தில் ஒற்­றுமை மற்றும் இணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்கள் அவ­சியம். இன ஒற்­று­மைக்­கான சிறந்த திட்­ட­மொன்று அநு­ரா­த­பு­ரத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டதை அவ­தா­னித்தோம். ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் நடத்­தப்­பட்டு இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­ய­டைந்த தினத்­தன்று அநு­ரா­த­புரம் ஜும்மா பள்­ளி­வா­சலின் நிர்­வாக குழு உறுப்­பி­னர்கள், அங்­குள்ள புனித ஜோசப் தேவா­ல­யத்­திற்குச் சென்­ற­தோடு, பக்­தர்­களை உப­ச­ரித்­தனர். பௌத்த சமூ­கத்­தி­னரும் இந்­நி­கழ்வில் பங்­கேற்­றனர்.

முன்­னாளர் மாகாண சபை உறுப்­பி­னரும் புன­ரு­தய நிகழ்ச்­சித்­திட்­டத்தின் தலை­வ­ரு­மான ஜயலத் பண்­டார சென­வி­ரத்­னவின் தலை­மையில் இந்­நி­கழ்ச்­சித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. போரினால் பாதிக்­கப்­பட்ட பெண்­களின் அமைப்பு, வேவா பெந்தி ரட மற்றும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான கூட்­ட­மைப்பின் பெண்கள் முன்­னணி (Women’s Front of Weva Bendi Rata and Inter – religious) ஆகி­யன இந்­நி­கழ்ச்­சித்­திட்­டத்­துடன் கைகோர்த்­தன.

“30 வருட கால யுத்­தத்தால் நாம் பெரிதும் பாதிக்­கப்­பட்டோம்” என ஜயலத் பண்­டார குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், “தெற்­கி­லுள்ள ஏனைய பகு­தி­களைச் சேர்ந்த மக்­களை விட, அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள மக்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டனர். யுத்தம் கார­ண­மாக, சமா­தா­னமும் நல்­லி­ணக்­கமும் வெறும் வார்த்­தை­க­ளுக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. சமு­தா­யத்தில் அதனை செயற்­பாட்டு ரீதியில் நாம் காண­வில்லை. இந்த வார்த்­தை­க­ளுக்கு நாம் உயிர்­கொ­டுக்க வேண்டும். சந்­தே­கத்­தையும் அச்­சத்­தையும் வெறுப்­பு­க­ளையும் ஊக்­கு­விக்கும் பலர் உள்ள நிலையில், எமது செயற்­பா­டுகள் மிக முக்­கி­ய­மா­னவை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் மக்கள் அச்­ச­ம­டைந்­தனர். பேருந்தில் ஒரு முஸ்லிம் நபரின் அருகில் அமர்­வ­தற்கு சிங்­கள மக்கள் பயந்­தனர். முஸ்லிம் மக்­களின் கடை­களில் பொருட்கள் வாங்­கு­வதை சிங்­கள மக்கள் பலர் புறக்­க­ணித்­தனர். இந்த இடை­வெ­ளியை குறைப்­ப­தற்­காக ஏதா­வது செய்ய விரும்­பினேன். ஏதேனும் செய்­ய­வேண்­டிய தேவை எனக்கு ஏற்­பட்­டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலில் உயிர்­நீத்­த­வர்­களை நினை­வு­கூர்ந்து தேவா­ல­யத்­தி­லி­ருந்து திரும்பும் கிறிஸ்­தவ மக்­களை முஸ்­லிம்கள் உப­ச­ரிப்­பது சிறந்­த­தென கரு­தினேன். மக்கள் மத்­தியில் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்பும் ஒரு முன்­னெ­டுப்­பாக இது அமை­யு­மென எதிர்­பார்த்தேன்” என்றார்.

அநு­ரா­த­புரம் புனித ஜோசப் தேவா­ல­யத்தைச் சேர்ந்த அருட்­தந்தை திலீப் மற்றும் எரந்த ஆகி­யோ­ருடன் திரு. சென­வி­ரத்ன கலந்­து­ரை­யா­டினார். அதன் பின்னர், இத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் நோக்கில் அநு­ரா­த­புரம் ஜும்மா பள்­ளி­வா­சலின் தலைமை மௌலவி மொஹமட் கையூம் தலை­மை­யி­லான பள்­ளி­வாசல் நிர்­வாக குழு­வி­ன­ருடன் இணைந்தார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் இரண்டாம் வருட நினை­வேந்­த­லின்­போது அனைத்து கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களும் கடு­மை­யான பாது­காப்பின் கீழ் இருந்­தன” என சென­வி­ரத்ன குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், “இந்த நிகழ்ச்­சித்­திட்­டத்­தினை யாரா­வது குழப்ப முயற்­சிக்­கலாம் என அஞ்­சினோம். அவ்­வாறு இடம்­பெற்றால் நல்­லி­ணக்க செயற்­பாட்­டிற்­கான சகல முயற்­சி­களும் வீணா­கி­விடும். ஆகையால், இந்­நி­கழ்ச்­சித்­திட்டம் தொடர்­பாக நாம் விளம்­பரம் செய்­ய­வில்லை. தேவா­லய ஆரா­த­னையில் கலந்­து­கொண்டு திரும்­பிய மக்­க­ளுக்கு முஸ்­லிம்கள் பால் ஆகாரம் கொடுத்து உப­ச­ரித்­தனர். இந்த உப­ச­ரிப்பு, முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ சமூ­கங்­க­ளுக்கு இடையே நல்­லு­றவை கட்­டி­யெ­ழுப்­பி­யது. கத்­தோ­லிக்க மற்றும் இஸ்­லா­மிய வணக்­கஸ்­த­லங்­களின் மதத் தலை­வர்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தித்து, கலந்­து­ரை­யாடி, தமது உறவை மேம்­ப­டுத்­திக்­கொண்­டனர். தற்­போ­தைய சூழ்­நி­லையில் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இவ்­வா­றான கூடுதல் நிகழ்ச்­சித்­திட்­டங்கள் அவ­சியம்” என்றார்.

அநு­ரா­த­புரம் ஜும்மா பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உறுப்­பினர் எம்.பி. சமத் அவர்­களும் இந்­நி­கழ்ச்­சித்­திட்­டத்­திற்கு பலத்த ஆத­ரவை வழங்­கினர். “சஹரான் மற்றும் அவ­ரது குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­கு­தலின் பின்னர், சகல முஸ்­லிம்­க­ளையும் மக்கள் சந்­தே­கத்­து­ட­னேயே பார்த்­தனர். ஒரு­சி­லரே தீவி­ர­வா­திகள் என்ற உண்­மையை மறந்து, ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் நோக்கி விரல்­நீட்­டினர். இந்த நாட்டில் சிங்­களம், தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்­கியர் மற்றும் ஏனைய சமூ­கத்­தினர் வாழ்­கின்­றனர். நாம் ஒரு தேச­மாக வளர்ச்­சி­ய­டைய விரும்­பினால், இச்­ச­மூ­கங்கள் அனைத்தும் கைகோர்க்க வேண்டும். ஒரு­சிலர் தமது அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இந்த ஒற்­று­மையை சீர்­கு­லைக்க முயற்­சிக்­கின்­றனர்.

தேஷ்யே குரு­னன்­சே­லாகே கெதர என்­பது எனது குடும்பப் பெய­ராகும். இது சிங்­கள குடும்பப் பெயர். நாம் பிரிந்­து­சென்று போரா­டினால் எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு இந்த நாட்டை பாது­காத்து தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­யுமா? ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலால் உரு­வாக்­கப்­பட்ட சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெளி இன்னும் காணப்படுகின்றது. எமது உறவுகளை மேம்படுத்திக்கொள்ள எமது இரண்டு சமூகங்களும் தியாகங்களை செய்ய வேண்டும். இரு தரப்பும் சிறிய விடயங்களிலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டுமென நான் கருதுகின்றேன். ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் பங்கேற்ற கிறிஸ்தவ மக்களின் துயரங்களை நாம் பகிர்ந்துகொண்டோம். சமாதான விரும்பிகளாக, மக்கள் சகோதரத்துவத்தை பகிர்ந்துகொள்ள ஒன்றுபட்டால் மாத்திரமே நாம் இனவாதிகளை தோற்கடிக்க முடியும். இது ஒரு சிறிய முயற்சி என்றாலும், பிரதான சக்திகள் இனவாதத்தை பரப்புகின்றதன் பின்னணியில் நாட்டின் சகல இடங்களிலும் இதுபோன்ற சிறு மாற்றுத்திட்டங்களை நாம் முன்னெடுப்பது அவசியம். எமது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கு அது மிகவும் அவசியமாகும்.“ என சமத் மேலும் கூறுகிறார்.

நன்றி journo , Vidivelli

No comments

Powered by Blogger.