Header Ads



ரிஷாத்தை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்குக, பாயிஸ் முஸ்தபா வாதம், பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் விண்ணப்பம்

(எம்.எப்.எம். பஸீர்)

முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யு­தீனை சி.ஐ.டி.யினரின் பொறுப்­பி­லி­ருந்து விடு­வித்து, பிணை வழங்கி அவரை வீட்டுக் காவலில் வைப்­ப­தற்­கான அனு­ம­தியை வழங்­கு­மாறு அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் நேற்று -09- உயர்­நீ­தி­மன்­றத்தில் கோரிக்­கை­யினை முன்­வைத்­தனர். இது தொடர்­பான சட்­டமா அதி­பரின் அபிப்­பி­ரா­யத்தை எதிர்­வரும் 15 ஆம் திகதி முன்­வைக்­கவும் உயர் நீதி­மன்றம் நேற்று அனு­ம­தி­ய­ளித்­தது.

சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் இது­வரை முன் வைக்­கப்­ப­டாத பின்­ன­ணியில், அவரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 11/1 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழா­வது நிவா­ர­ண­ம­ளிக்­கப்­படல் வேண்டும் என உயர் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது. சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ரா­சாவின் ஆலோ­ச­னைக்கு அமைய மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, ரிஷாத் பதி­யுதீன் சார்பில் ஆஜ­ராகி இந்த வாதத்தை முன் வைத்தார். வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பை மையப்­ப­டுத்தி அவர் இந்த வாதத்தை முன் வைத்தார்.

அதன்­படி சி.ஐ.டி. தடுப்பில் உள்ள ரிஷாத்­துக்கு பிணை­ய­ளிக்­கப்­பட்டு, வீட்டுக் காவ­லிலோ அல்­லது பயணக் கட்­டுப்­பா­டு­க­ளு­டனோ விசா­ர­ணை­களை தொடரக் கூடிய சந்­தர்ப்பம் உள்­ள­தாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா சுட்­டிக்­காட்­டினார்.

முன்னாள் அமைச்­சரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் தம்மை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்­துள்­ளதை ஆட்­சே­பித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­துள்ள வழக்கின் பரி­சீ­ல­னைகள் நேற்று மீளவும் இடம்­பெற்­றன.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான விஜித் மலல்­கொட, முர்து பெர்­ணான்டோ மற்றும் காமினி அம­ர­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் இவ்­வ­ழக்­குகள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.

நேற்­றைய தினம் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் ரியாஜ் பதி­யுதீன் சார்பில் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட இரு வேறு மனுக்கள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ரா­சாவின் ஆலோ­சனை பிர­காரம் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான என்.எம் சஹீத், ருஷ்தி ஹபீப், புலஸ்தி ஹேவ­மான்ன ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது குறித்த ரிஷாத் பதி­யு­தீனின் வழக்கு தொடர்பில் நிவா­ரணம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் திகதி ஒன்­றினைப் பெற சட்­டத்­த­ர­ணிகள் முயன்­றனர்.

இதன்­போது நீதி­ய­ரசர் விஜித் மலல்­கொட, ‘இந்த வழக்கு நீதி­ய­ர­சர்கள் கார­ண­மாக பிற்­போ­வ­தாக ஊட­கங்­களில் அன்­றாடம் செய்­தி­களை காண முடி­கி­றது. இன்று நான் இவ்­வ­ழக்கை பரி­சீ­லிக்க தயா­ராக உள்ளேன். நீதி­ய­ர­சர்கள் கார­ண­மாக வழக்கு பிற்­போ­கி­றது எனும் குற்­றச்­சாட்­டுக்கு என்னால் ஆளாக முடி­யாது” எனத் தெரி­வித்து வழக்கை பிற்­பகல் 1.30 மணி முதல் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக அறி­வித்தார். அதன்­படி குறித்த வழக்கு பிற்­பகல் வேளையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

ரிஷாத் பதி­யுதீன், ரியாஜ் பதி­யுதீன் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ரா­சாவின் ஆலோ­ச­னைக்கு அமைய சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மன்றில் விட­யங்­களை முன் வைத்தார்.

அதன்­படி ரிஷாத் பதி­யுதீன் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 6 (1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் சகல வித­மான பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­ப­டு­வ­தா­கவே குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டி­ருக்­க­வில்லை.எனினும் அவரை தடுத்து வைத்து விசா­ரிக்க பெறப்­பட்ட தடுப்புக் காவல் உத்­த­ரவில், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக தடுத்து வைப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது. எனினும் கைதின் போது அது தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

கைதின் பின்னர் ரிஷாத் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கு நிதி உதவி அளித்­தமை தொடர்பில் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டது.இம்­மன்றில் முன் வைக்­கப்­பட்­டுள்ள சட்­டமா அதி­பரின் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சே­ப­னை­களில், அவர் குளோசஸ் நிறு­வ­னத்­துக்கு பணம் சம்­பா­திக்க உத­வி­ய­தாக கூறப்­பட்­டுள்­ளது. இந்த அடிப்­படை உரிமை மீறல் வழக்கின் பிர­தி­வா­திகள் கூறும் ஒவ்­வொரு விட­யமும் ஒன்­றுக்­கொன்று முர­ணா­கவே உள்­ளது.இது முற்று முழு­தாக ரிஷாத் பதி­யு­தீனின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ளது.

சி.ஐ.டி. அதி­கா­ரிகள் இத்­தனை நாள் ரிஷாத்தை விசா­ரித்து அவ­ருக்கு எதி­ரான ஆதா­ர­மாக கூறு­வது, ரிஷாத் அவ­ரது பிரத்­தி­யேக செயலர் பால­சுப்­ர­ம­ணி­யத்­துக்கு எடுத்த தொலை­பேசி அழைப்­பொன்­றினை மட்­டுமே. குளோசஸ் நிறு­வ­னத்­துக்கு செப்பு தொகை­யினை பெற்­றுக்­கொள்ள அமைச்சின் அனு­ம­தியை அளிப்­ப­தற்­காக அந்த அழைப்பு எடுக்­கப்­பட்­ட­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் கூறு­கின்ற போதும் அது முற்­றிலும் பொய்­யா­னது என்­பது அவர்கள் மறைத்த ஆவ­ணங்கள் ஊடாக தெரி­கி­றது.

குறித்த நிறு­வ­னத்­துக்­கான பூரண அனு­மதி ஜனா­தி­பதி செய­லகம் ஊடா­கவே வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான ஆவ­ணமே இது (உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்ப்ட்­டி­ருந்த ஆவ­ண­மொன்­றினை காட்­டினார்) சட்ட மா அதிபர் தரப்பு தமது ஆட்­சே­ப­னத்தில் இந்த ஆவ­ணத்தை மறந்­து­விட்­டது.

இந்த விட­யத்தில் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், பால­சுப்­ர­ம­ணி­யத்­துடன் ரிஷாத் பதி­யுதீன் குறித்த அனு­ம­திக்கு முன்­னைய தினம், தனது அமைச்சில் இடம்­பெற்ற அபி­வி­ருத்தி நிகழ்­வொன்று தொடர்­பி­லேயே கதைத்­த­தாக சாட்­சிகள் ஊடா­கவும் வெளிப்­பட்­டுள்­ளது.அப்­படி இருக்­கையில், ரிஷாத்­துக்கும் குண்­டு­வெ­டிப்­புக்­குமோ, குளோசஸ் நிறு­வ­னத்தின் கொடுக்கல் வாங்­கல்­க­ளு­டனோ எந்த தொடர்­பு­களும் இல்லை என்­பது நூறு வீதம் புல­னா­கி­றது.

எனவே தான் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ரிஷாத் பதி­யு­தீனை அதி­லி­ருந்து விடு­விக்க வேண்டும் என கோரு­கிறோம். ஒரு­வேளை விசா­ர­ணை­யா­ளர்கள் ரிஷாத் குறித்த விசா­ரணை நிறை­வ­டை­ய­வில்லை என கூறு­வார்­க­ளாயின், அவரை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 11(1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ், தடுப்புக் காவல் இடத்தை மாற்றி நிவா­ர­ண­ம­ளிக்­கலாம். அவரை வீட்டுக் காவலில் வைத்து விசா­ரணை செய்யும் வண்­ணமோ அல்­லது, போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்­டு­களை விதித்தோ அவ­சி­ய­மான முறையில் அதனை செய்­து­கொள்­ளலாம்.

வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பு இவ்­வாறு செய்ய முடியும் என்­ப­தற்கு ஒரு எடுத்­துக்­காட்­டாகும். (குறித்த வழக்குத் தீர்ப்பும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.) என வாதங்­களை முன் வைத்தார்.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாட் பதி­யுதீன் தொடர்பில் அந்த சட்­டத்தின் 11/1 ஆம் பிரிவின் கீழான நிவா­ர­ணத்தை வழங்குமாறு கோரும் விண்ணப்பத்தை ஏற்கனவே சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.

இந் நிலையில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், அந்த விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சில் பரிசீலனையில் இருப்பதனால், மனுதாரர் தரப்பு வாதத்துக்கு எதிர்வாதத்தை முன் வைக்க கால அவகாசம் வேண்டும் என குறிப்பிட்டார்.அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளை ஒத்தி வைத்தது.

ரியாஜ் பதியுதீனின் கைதுக்கும் எந்த அடிப்படையும் இல்லை என இவ்வாதங்களின் போது ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

No comments

Powered by Blogger.