Header Ads



ஒன்லைன் கற்கைகளுக்காக அதிகளவு, பணம் விரயமாகுவதாக கவலை


இணையவழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக அதிக பணம் விரயமாவதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

டேடா பயன்பாட்டின்போது ஏற்படும் சிக்கல்கள் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் உரிய வேளையில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொவிட்-19 பரவலுக்கு காரணமாக பல பெற்றோர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

இதன்காரணமாக பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் இணையவழி கற்றல் செயற்பாடுகளுக்காக டேட்டா அட்டைகளை கொள்வனவு செய்ய இயலாமலுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இணையவழி கற்றல் செயற்பாடுகளுக்காக பல டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் விஷேட சலுகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.