Header Ads



சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் - பிரதமர்


பாரிய நீர் வழங்கல் திட்டங்களில் உள்ளடக்க முடியாத கிராம பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு சமூக நீர் வழங்கல் திட்டம் ஊடாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

“விசல் மாத்தளை” நீர் வழங்கல் திட்டம் (28) அலரி மாளிகையில் வைத்து இணைய தொழில்நுட்பம் ஊடாக மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதன்போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விசல் மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக மாத்தளை நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு 24 மணிநேர நீர் விநியோகத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக நேரடியாக சுமார் 90000 குடும்பங்களை சேர்ந்த 354000 பேர் நன்மையடைவர்.

இத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்ஸின் நிதி உதவியின் கீழ் 31000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதன்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

“நீர் என்பது எமக்கு மிகவும் அத்தியவசியமானதொன்றாகும். நீர் இருப்பினும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமானதாகும். நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை சமாளிக்க ஒரு அரசாங்கமாக 'அனைவருக்கும் நீர்' என்ற ஒன்றிணைந்த திட்டத்தை முன்வைக்க முடிந்தது.

கடந்த தேர்தல் காலப்பகுதியில் சில பிரதேச மக்கள் எம்மை சுற்றிவளைத்து குடிநீர் தேவை குறித்து எமக்கு தெரிவித்திருந்தமை நினைவிருக்கிறது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம் குடிப்பதற்கு நீரை பெற்றுத் தாருங்கள் என அவர்கள் கோரினர். மாத்தளை பிரதேச மக்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.

நாம் ஆட்சிக்கு வந்து அது தொடர்பில் ஆராய்ந்தோம். குறிப்பாக கிராம மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நம் நாட்டில் குறைந்தது பாதி பேருக்கேனும் இன்னும் குழாய் மூலமான பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. எமது ஆட்சிக் காலத்தில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கடந்த ஆட்சியாளர்களால் அது இடைநிறுத்தப்பட்டமையை நான் புதிதாக கூற வேண்டியதில்லை.

No comments

Powered by Blogger.