இலங்கை - ஓமான் தேசிய தனியார் வர்த்தக கூட்டமைப்புகளுக்கிடையான ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை - ஓமான் தேசிய தனியார் வர்த்தகத் கூட்டமைப்புகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இரு நாடுகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களினால் ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை - ஓமான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக மாநாடு மற்றும் தனியார் கம்பனிகளுக்கிடையிலான நேரடி வியாபார கலந்துரையாடல்களும் (B2B matchmaking) இநிகழ்வின் போது இடம்பெற்றன. இரு நாடுகளைச்சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தனியார் கம்பனிகள் பங்குபற்றின. சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், மீன்வளம், படகு கட்டல், உணவு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆடைத் தொழில் போன்ற துறைகளைச்சார்ந்த இருநாட்டுத் தனியார் கம்பனிகளுக்கிடையிலான வர்த்தக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை -ஓமான் தனியார் துறைகளுக்கிடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வளர்ந்து வரும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என ஓமானுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
[Manas hussain ]
தூதுவர் அமீர் அஜ்வத அவர்கள் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதட்காக அர்ப்பணிப்புடன் செயட்பட்டு வருகின்றார் .இது மிகவும் பாராட்டுக்குரியது .
ReplyDelete