முஸ்லிம்களுடனும் கலந்துரையாடல் - நாட்டை பாதுகாக்க விடுதலை போராட்டத்திற்கு தயாராகுங்கள் - குணவங்ச தேரர்
(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது. அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து இன மக்களும் போராடியதுபோன்று தற்போது இரண்டாவது சுதந்திர விடுதலை போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணையவேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆளும் அரசாங்கம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு இந்த நாட்டை வித்து சாப்பிடும் முறையை ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு செல்கின்றது.
வானம் மற்றும் கடல் எனும் இரண்டு இடங்களிலும் எமக்கு பிரச்சினை இருக்கின்றது. அனைத்து பக்கத்தாலும் எமக்கு துரதிஷ்டமான நிலையே ஏற்பட்டிருக்கின்றது.
நாங்கள் பல வெளிநாட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டில்லை. கைச்சாத்திட்டிருந்தால் பிரச்சினை ஏற்படும்.
மேலும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் எமது கனிம மணல்.போஸ்பேட், இல்மனய்ட், தங்கம் உட்பட பல கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு முயற்சித்துவருகின்றனர்.
சீனர்கள் இங்குவந்து எமது குளங்களை தோண்டுகின்றனர். குளங்களில் கனிம வளங்களை கொள்ளையடித்துக்கொண்டு, சேற்று மண்ணை அகற்றினால் குளத்தின் மூலம் எடுப்பதற்கு எந்த பிரயாேசனமும் இருக்காது.
நீர்ப்பாசனம் என்பது எமது பெரும் வளமாகும். இவ்வாறான தேசிய வளங்களுக்கு கைவைக்க இடமளித்து அரசாங்கம் பார்த்துக்கொண்டிருகின்றது.
இந்தளவு தேசிய வளங்களை அழிப்பவர்களை அரசாங்கம் கைது செய்ததா? அரசாங்கம் இரண்டு சட்டங்களில் செயற்படுகின்றது.
அதனால் அரசாங்கம் இவ்வாறு வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து, அவர்களை திருப்திப்படுத்தி, நாட்டு மக்களுக்கு குழிபறிப்பதாக இருந்தால், நாங்கள் இரண்டாவது சுதந்திர போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கக்கூடாதா என கேட்கின்றேன்?
எனவே 1948இல் இந்த நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்தார்கள்.
அதேபோன்று தற்போது ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இரண்டாவது சுதந்திர விடுதலை போராட்டத்துக்கும் ஒன்றிணையவேண்டும்.
இதற்காக ஒன்றிணைவதற்கு வடக்கில் தமிழ் மக்கள், கிழக்கில் முஸ்லிம் மக்கள் உட்பட நாட்டில் இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் என்னுடன் கைகோர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாடி இருக்கின்றோம் என்றார். (வீரகேசரி)
of course, We faught for 1948 liberation. You people again colonised the country to Rajapakshe colony saying he Dutagemunu....
ReplyDeleteIf we are fight again,,, girst thing is to wipe aout you alll....