முஸ்லிம் உலகின் அவலங்களையும், கொடுமைகளையும் உலகிற்கு அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் ஆப்கானிஸ்தானில் படுகொலை
இந்தியாவிற்கான ஆப்கான் தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவில் ரொய்ட்டர் செய்திசேவையின் தலைமைபடப்பிடிப்பாளர் டானியல் சித்திகி கொல்லப்பட்டுள்ளார் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் இராணுவத்தினருடன் அவர் பயணம் செய்துகொண்டிருந்தவேளை, அவரது வாகனம் பாக்கிஸ்தான் எல்லையில் தாக்குதலிற்குள்ளானது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்து விபரங்கள் வெளியாகவில்லை- இந்திய அரசாங்கம் இன்னமும் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
எனது நண்பர் கொல்லப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன் என இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தானின் தூதுவர் பாரிட் மம்முன்ட்சே தெரிவித்துள்ளார்.
சித்திக்கி ஒரு தசாப்தகாலமாக ரொய்ட்டர் செய்தி சேவைக்காக பணியாற்றிவந்துள்ளார்.
மியன்மாரில் ரொகிங்யா இனத்தவர்கள் எதிர்கொண்ட வன்முறைகளை பதிவு செய்தமைக்காக அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது
சமீபத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமாக காணப்பட்டவேளை உடல்கள் எரிக்கப்படுவதை காண்பிக்கும் அவரது படம் பெரும் பாராட்டுகளையும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது.
Post a Comment