Header Ads



பசிலின் பாராளுமன்ற பிரவேசத்தை புகழ்ந்துள்ள நஸீர் அஹமட்


பழுத்த அரசியல் அனுபவமுள்ள பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்றப் பிரவேசத்தால் நாட்டின் எதிர்கால வாசல் விசாலமடையும் என தான் நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷ விhயழக்கிழமை 08.07.2021 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் வாழ்த்துத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பஷிலின் நாடாளுமன்ற வருகை புதிய உற்சாகத்தையூட்டும். இழந்துபோகும் நம்பிக்கைகளை மீண்டும் தூக்கி இன சமரசத்தை நிறுத்த உதவும்.

பஷிலின்  துல்லியமான பார்வையில் அவர் அரசுக்கு வழங்கிய ஆலோசனைகள் நாட்டின் பொருளாதாரத்தை அன்று செழித்தோங்கச் செய்திருக்கிறது. வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களால் அரசியல் பொதுவெளியில் பஷிலின் ஆளுமை அடையாளம் காணப்பட்டது.

இந்த ஆளுமையின் தேவையை நாட்டு மக்கள் இன்றும் உணர்ந்து நிற்பதாகவே நான் கருதுகிறேன்.

இவ்வாறான ஒரு ஆளுமை நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளமையையும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளமையையும் அனைவரும் விரும்பக் கூடிய ஒரு விடயமாகும்

அனைத்து சமூகங்களையும் அரவணைத்துப் போகக் கூடிய ஆற்றல் பெற்றுள்ள பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவியேற்றிருப்பது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலிந்து போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் உத்வேகத்துடன் கட்டியெழுப்ப உதவும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


1 comment:

  1. வந்த வுடன் கூஜா தூக்கிடியப்பா வெட்கமா இரிக்குதுடா எங்களுக்கு.

    ReplyDelete

Powered by Blogger.