கொரோனாவின் புதியவகையான லம்ப்டா, இலங்கையில் எந்நேரத்திலும் கண்டறியப்படலாம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை
எனினும் லம்ப்டா மாறுபாட்டின் எந்தவொரு தொற்றும் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை துணைப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுபோன்ற தொற்றுகள் எந்த நேரத்திலும் கண்டறியப்படலாம் என்பதையும், சுகாதார அதிகாரிகள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லம்ப்டா மாறுபாட்டை தடுக்க புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை, ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் கண்டிப்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் டெல்டா தான் தற்போது மிகவும் ஆபத்தான வைரஸ் என்று இலங்கை மருத்துவ சங்கத் தலைவர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
வைரஸ் பரவும் விதம் டெல்டா அல்லது லம்ப்டாவாக இருந்தாலும், சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பது மாத்திரமே கோவிட் இன் எந்தவொரு மாறுபாட்டிலிருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment