Header Ads



எனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது - துணிச்சலுடன் கூறுகிறார் மைத்திரி


சிறிலங்கா சுதந்திர கட்சி இன்னும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்படுகிறது என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படவுள்ளதாகவும், அவ்வாறு தொடரப்பட்டால் அரசாங்கத்துடனான உறவு எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படும் என்று தாம் நினைக்கவில்லை என்று மைத்திரி பதிலளித்தார்.

தற்போதும் சுதந்திர கட்சி அரசுடனேயே இணைந்துள்ளது என்றும் அவர் மீளுரைத்தார்.


2 comments:

  1. அரசாங்கத்துடன் இணைந்தால் எந்தப் பெரிய கள்ளனுக்கும் பாதுகாப்பும் சட்டத்திலிருந்து விடுதலையும் கிடைக்கும் என்பதை மறுசிரா இங்கு உறுதிப்படுத்துகின்றார். கேவலம் இந்த நாட்டு, வௌிநாட்டு மக்களை கொலை செய்வதற்கு உறுதுணையாக நின்று சட்டத்துக்கு முன்னால் ஔித்து விளையாடும் இந்த மறுசிராவுக்கும் அதுபோன்ற கொலைகாரர்களையும் அந்த இறைவன் தான் தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அரசாங்கத்துடன் இணைந்தால் எந்தப் பெரிய கள்ளனுக்கும் பாதுகாப்பும் சட்டத்திலிருந்து விடுதலையும் கிடைக்கும் என்பதை மறுசிரா இங்கு உறுதிப்படுத்துகின்றார். கேவலம் இந்த நாட்டு, வௌிநாட்டு மக்களை கொலை செய்வதற்கு உறுதுணையாக நின்று சட்டத்துக்கு முன்னால் ஔித்து விளையாடும் இந்த மறுசிராவுக்கும் அதுபோன்ற கொலைகாரர்களையும் அந்த இறைவன் தான் தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.