முஸ்லிம் அரசியல்வாதிகள் சரத் வீரசேகரவுடன், றிசாத் தொடர்பில் பேச்சு - ஜனாதிபதி தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை
- M. ANZIR -
றிசாத் பதியுதீன், அவரது குடும்பத்தினர் கைது, அதனால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் 2 பேர், அமைச்சர் சரத் வீரசேகரவுடன் சந்தித்து உரையாடியுள்ளதாக நம்பரகமான வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.
எனினும், தற்போது றிசாத் விவகாரம் தேசிய விடயமாகி, தனது கரங்களையும் மீறிச் சென்றுவிட்டதாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியாதெனவும், சரத் வீரசேகர 2 முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக, உரையாடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடன் இதுபற்றி நேரடியாக உரையாட, 2 முஸ்லிம் அரசியல்வாதிகளும் அனுமதி கோரியபோதும், இந்த செய்தியை எழுதும்வரை அவர்களுக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை எனவும் Jaffna Muslim இணையத்திற்கு மேலும் அறிய வருகிறது.
குற்றங்கள் செய்வதும் பின்னர் அவற்றிலிருந்து கள்ளவழியாக தப்பி, நல்லபிள்ளாக நாடகமாடுவது தான் முஸ்லிம்களின் வேலை போல
ReplyDeleteகுற்றங்கள் செய்வதும் பின்னர் அவற்றிலிருந்து கள்ளவழியாக தப்பி, நல்லபிள்ளாக நாடகமாடுவது தான் முஸ்லிம்களின் வேலை போல
ReplyDelete