உயிரை பணயம் வைத்து களமிறங்கிய இராணுவத்தினர்
291 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் இன்று (23) சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக 4 நாட்கள் தேடிய பின்னர், சுமார் 200 பேர் அடங்கிய இராணுவ குழு நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளைத் இன்றைய தினம் தேடியது.
நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியை குறுகிய தூரத்திற்கும், நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியையும் கீழ் பகுதியிலிருந்து மேலே தேடுவதற்கு இராணுவத்தினர் கயிறுகளைப் பயன்படுத்தினர். ஆனால் காணாமல் போன யுவதியின் எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தேடல் குழு தெரிவித்தது.
கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் நான்கு இளம் பெண்கள் டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சென்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
-கிரிஷாந்தன்-
Post a Comment