முஸ்லிம்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை, கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள் - சாணக்கியன்
- பாறுக் ஷிஹான் -
அம்பாறை கல்முனை வீதியை முடக்கி மீனவர்களின் பிரச்சினையை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்
பலதடவைகள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை பேசியுள்ளேன். ஆனால் எவ்வித பயனுமில்லாமல் இருக்கும் இவர்களுக்கு பாடம் புகட்டும் நடவடிக்கையாக அம்பாறை- கல்முனை வீதியை அரை மணித்தியாலயமாவது முடக்கி மீனவர்களின் பிரச்சினையை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். முடக்குங்கள் என்று நான் மாட்டேன். முடக்கி உங்கள் சக்தியை காட்டுங்கள் என்று மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு- அம்பாரை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள் சுறுக்குவலைகள் தொடர்பில் இன்று (23) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்இ அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் உள்ள நிலையிலும் என்னையும் இங்கு கலந்து கொண்டிருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரனையும் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கும் இந்த மீன்பிடியினால் பல்வேறு நஷ்டங்கள் ஏற்பட்டு என்னுடைய மீன்பிடி உபகரணங்களையும் விற்பனை செய்ய எண்ணியுள்ளேன். கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமில்லை. அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள். அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிங்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர் பலகையில் மாற்றம் வருமே தவிர தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கபோவதுமில்லை. இது தொடர்பில் நான் பெரிதாக பேசுவதில்லை என்கிறார்கள். இதில் பேச ஒன்றுமில்லை. இதனை வைத்து கொண்டு அரசியல் மட்டுமே நடக்கிறது. சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவேன். கல்முனை பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என்று நான் மட்டுமே தான் பாராளுமன்றத்தில் பேசினேன் என்றார்
இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் எம்.பி த.கலையரசனும் கலந்து கொண்டிருந்தார்.
--
Post a Comment