Header Ads



தயாசிறி தனது பதவியினை இராஜினமா செய்யலாம் என அறிவிப்பு


“பத்திக் உற்பத்தி இராஜாங்க அமைச்சினை நகைச்சுவையான  அமைச்சாக கருதினால் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அதனை  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம்” என, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

“நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறிய அவர், அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுவதை விடுத்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனியாக அவர் போராடலாம்” என்றார்.

“தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய இராஜாங்க அமைச்சுக்களை ஜனாதிபதி அறிமுகப்படுத்தினார். பத்திக்  உற்பத்தி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சும்  அதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. 

“இந்த அமைச்சினை பயனற்ற நகைச்சுவையான அமைச்சு என பத்திக் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். பத்திக் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலை மேம்படுத்தும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவருக்கு உண்டு.

அமைச்சுக்களை நகைச்சுவையானதாக கருதினால், அந்த அமைச்சுடன் தொடர்புடைய துறைகள் ஒருபோதும் முன்னேற்றமடையாது. அமைச்சினை முன்னேற்ற முடியாவிட்டால் அவர் இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினமா செய்யலாம்.

அமைச்சரவை அமைச்சினை எதிர்பார்த்த தயாசிறிக்கு அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினாலேயே  இவ்வாறான கருத்துக்களைவெளியிட்டு வருகின்றார்” என்றும் லன்சா கூறியுள்ளார்

No comments

Powered by Blogger.