Header Ads



நாட்டை முடிய பின்னரே மரண விகிதம் குறைந்தது, டெல்டா எமது கவனயீனத்தினால் தற்போது மிக வேகமாக பரவுகின்றது


இந்நாள்களில் பரவுகின்ற நோயின் தாக்கம், இன்னுமொரு மாதத்தில், தெரியவருமெனத் தெரிவித்துள்ள  இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவியான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன, ஒரு மாதத்துக்குப் பின்னரே பெறுபேற்றை காணமுடியும் என்றார்.

கடந்த காலங்களில் அமலில் இருந்த ​பயணக்கட்டுப்பாடுகள் காரணமாகவே கொரோனா மரணங்கள் குறைந்திருந்தன எனத் தெரிவித்துள்ள அவர், இக்காலப்பகுதியில், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை மிகவேகமாக முன்னெடுத்திருக்க வேண்டும்.

“டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகாரித்துள்ள, கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில், டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றார்.

ஒருவாரத்துக்கு நாட்டை முடியதன் பின்னரே அதன் பெறுபேற்றை தெரிந்துகொள்ள முடிந்தது. அதனால் மரண விகிதம் குறைந்திருந்தது. தற்போது பரவிகொண்டிருக்கும் தொற்றின் பெறுபேறுகள், இன்னுமொரு மாதத்துக்குப் பின்னரே தெரியவரும் என்றார்.

பெறுபேறு வரும் வரையிலும் காத்திருந்தோமெனில், அதனை கட்டுப்படுத்த முடியாமற் போய்விடும். எனினும், எமது கவனயீனம் காரணமாக, இந்த தொற்று மிகவேகமாக நாடளாவிய ரீதியில், மிக வேகமாக பரவிகொண்டிருக்கின்றது. நாடுமுழுதும் பரவிவிடும் என்றும்கூட சொல்லலாம் என்றார்.

No comments

Powered by Blogger.