Header Ads



கால்மாக்ஸ், ஜோசப் ஸ்டாலினுக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை - பவித்திரா


ஜோசப் ஸ்டாலின், கால்மாக்ஸ் போன்றோருக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான சட்ட விதி முறையாகவே அமைய வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார். 

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனர்த்தமாகும். இது அரசியல் கோஷம் அல்ல. முழு உலகமும் ஏற்றுக்கொண்ட முறைக்கு அமைய இலங்கையிலும் சுகாதார வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இது குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இதனால் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு நேர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கொரோனா வைரஸ் பரவல் போன்ற பேரனர்த்தங்களின் போது தொழில் உரிமைகள் என்ற போர்வையில் அரசியல் கட்சிகளினதும் ஏனைய சக்திகளினதும் செயல்பட முயற்சிக்கின்றன. இவ்வாறான சந்தர்பங்களில் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரை பொலிசார் கைது செய்ய நேர்வதாகவும் அவர் மேலும் கூறினார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

1 comment:

Powered by Blogger.