ஆளும் கட்சி மீது தயாசிறி விமர்சனங்களை பொழியும் நிலையில், ஜனாதிபதியை சந்திக்க சு.க. தீர்மானம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கிடையேயான சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஆளும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அவ்வாறான பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
Post a Comment