Header Ads



உலகத்தின் முன்னிலையில் நகைப்புக்குரியவராகும், தேவை எனக்கு இல்லை - ஜனாதிபதி


எந்தவொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தையும் நிர்மாணிக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு, சூரிய சக்தி மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சின் மாதாந்த மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் இலங்கை பிரவேசிக்க வேண்டும் என தாம் வாக்குறுதி அளித்துள்ளதால், உலகத்தின் முன்னிலையில் நகைப்புக்குரியவராகும் தேவை தமக்கு இல்லை என குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தியதாக அந்தப் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அந்த தீர்மானத்துடன் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் உத்தேச 300 மெகாவாட் மின் உற்பத்திற்கான நான்காம் கட்ட நிர்மாணப் பணிகள் செயற்றிட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

குறித்த நான்காம் மின் உற்பத்திய நிலைய நிர்மாண ஒப்பந்தம் கேள்வி மனு கோரலின்றியே சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது.

நுரைச்சோலையின் முதல் மூன்று மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மாணித்த குறித்த நிறுவனம், நான்காம் கட்ட மின் உற்பத்தி நிலைய நிர்மாண செயற்றிட்டத்துக்காக அலுவலகமொன்றை ஆரம்பித்து உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்டமாக சட்டத்தரணிகள், நிதி ஆலோசகர்கள் உள்ளிட்ட ஏனைய நிபுணர்களின் சேவையைப் பெற்றுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 வீதத்தை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமது இலக்கிற்கு அமைவாக செயற்படுமாறு மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுற்றாடலைப் பாதுகாத்து நிலையான அபிவிருத்திக்காக ஜனாதிபதி எடுத்துள்ள இந்தத் தீர்மானம் மக்களின் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

No comments

Powered by Blogger.