Header Ads



இலங்கையில் வௌவால்களிடமிருந்து கொரோனா பரவியதா என சந்தேகமாக உள்ளது


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்கள் உட்பட பல விலங்குகளுக்கு வௌவால்களிடமிருந்து கொரோனா பரவியதா என்பது சந்தேகமே என்று வனசீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மிருகக்காட்சிசாலையிலுள்ள 'தோர்' என்ற சிங்கத்துக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தொற்றுக்குள்ளான சிங்கக் குட்டிகள், இரண்டு ஒரங்குட்டான்கள் மற்றும் இரண்டு சிம்பன்ஸிகளின் நிலை சாதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தெஹிவளை மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட அனைத்து உயிரியல் பூங்காக்களும் திங்கட்கிழமை (26) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கூறிய அவர், மிருகக்காட்சிசாலைகள் மூடப்படுவதால்   விலங்குகளின் உணவுத் தேவைகளுக்கான நிதியைப் பெறுவது கடினம் என்றும் கூறினார். TM

No comments

Powered by Blogger.