Header Ads



"காதி நீதிமன்ற முறைமையை, ஒழிக்க துணை போக கூடாது"


இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான முயற்­சிகள் கடந்த பல தசாப்­தங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அவை இது­வரை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 1951 ஆம் ஆண்டின் பின்னர் இச் சட்­டத்தில் எந்­த­வித திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­டா­ததன் கார­ண­மாக, சம­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

இச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வென 2009 இல் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால், ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக் குழு சுமார் 9 வருட கால இழு­ப­றியின் பின்னர் தனது அறிக்­கையை கைய­ளித்­தது. எனினும் இக் குழுவின் அங்­கத்­த­வர்கள் இரு வேறாகப் பிரிந்து மற்­றொரு அறிக்­கை­யையும் சமர்ப்­பித்­ததால் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கையை அமுல்­ப­டுத்­து­வதில் இழு­பறி தோன்­றி­யது. 2009 இன் பின்னர் நீதி­ய­மைச்­சர்­க­ளாக பதவி வகித்த பலரும் இச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான தமது ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­திய போதிலும் இதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் துணிவைப் பெற்­றி­ருக்­க­வில்லை.

இந் நிலை­யில்தான் 2019 இல் “ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோஷத்­துடன் ஆட்­சிக்கு வந்த பொது ஜன பெர­முன தலை­மை­யி­லான அர­சாங்கம் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தையும் தனது இலக்­கு­களில் ஒன்­றாகக் கொண்­டி­ருந்­தது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்ட தவ­றான பிர­சா­ரங்­களும் இதற்கு வலுச்­சேர்த்­தன. இந் நிலை­யில்தான் முஸ்லிம் தனியார் சட்­டத்தை முற்­றாக நீக்க வேண்டும் என்ற பிர­சா­ரங்கள் மேற்­கி­ளம்­பின. இன­வாத ஊட­கங்கள் காதி நீதி­மன்­றங்­களால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் என்ற போர்­வையில் பலரைக் கொண்­டு­வந்து முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு எதி­ரான தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை கட்­டி­யெ­ழுப்­பின.

இப் பின்­ன­ணி­யில்தான் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்­பான முயற்­சி­களை நோக்க வேண்­டி­யுள்­ளது. ஏற்­க­னவே நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் குழு­வி­னாலும் ஏனை­ய­வர்­க­ளாலும் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­களை ஒரு புறம் வைத்­து­விட்டு, அமைச்­ச­ரவைத் தீர்­மானம் என்ற போர்­வையில் காதி நீதி­மன்ற முறை­மையை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்­பாக வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை முஸ்லிம் சமூ­கத்தை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

காதி நீதி­மன்ற முறை­மை­யிலும் காதி நீதி­ப­தி­க­ளிலும் பல்­வேறு குறை­பா­டுகள் உள்­ளன என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொள்­கின்­றனர். எனினும் இக் குறை­பா­டு­களை நிவர்த்­தித்து இந்த முறை­மையை மேலும் வலுப்­ப­டுத்­து­வதே இதற்குத் தீர்­வாகும். மாறாக இதனை இல்­லா­தொ­ழிப்­ப­தல்ல என்­பதை நீதி­ய­மைச்சர் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அமைச்­ச­ர­வையில் நீதி­ய­மைச்சர் மாத்­தி­ரமே ஒரே­யொரு முஸ்லிம் பிர­தி­நி­தி­யாக இருக்­கின்ற நிலையில், முஸ்­லி­மல்­லாத பெரும்­பான்மை அமைச்­சர்கள் எவ்­வாறு இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள் குறித்த இறுதித் தீர்­மா­னத்­திற்கு வர முடியும் என பலரும் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர்.

அமைச்­ச­ர­வையின் இந்த ஒரு­த­லைப்­பட்­ச­மான தீர்­மா­ன­மா­னது முஸ்லிம் சமூ­கத்தை வெகு­வாக கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­துடன் உரிய முறையில் கலந்­தா­லோ­சிக்­காது இவ்­வா­றா­ன­தொரு பார­தூ­ர­மான தீர்­மானம் ஒன்­றுக்கு அர­சாங்கம் வரு­வ­தா­னது, எதிர்­கா­லத்தில் இலங்கை மீதான சர்­வ­தேச அழுத்­தங்­களை மென்­மேலும் அதி­க­ரிக்­கவே வழி­வ­குக்கும் என்­பதை நாம் சொல்­லித்தான் புரிந்து கொள்ள வேண்­டி­ய­தில்லை.

இத்­தீர்­மா­னத்தை சட்ட ரீதி­யாக சவா­லுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தீர்­மா­னித்­துள்­ளன. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் காதி நீதி­ப­திகள் போரமும் இத் தீர்­மானம் தொடர்பில் தமது அதி­ருப்­தி­யையும் கவ­லை­யையும் பகி­ரங்­க­மாக வெளி­யிட்­டுள்­ளனர்.

இந் நிலையில் நீதி­ய­மைச்சர் அலி சப்ரி இது விட­யத்தில் சமூ­கத்தின் மனக்­க­வ­லை­க­ளையும் நியா­ய­மான கோரிக்­கை­க­ளையும் புரிந்து கொண்டு இது தொடர்பில் அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமூகம் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாகும்.

“இந்த யோச­னையை நான் சமர்ப்­பிக்­க­வில்லை, இது பற்றி என்னால் எதுவும் பேச முடி­யாது“ என்று நழு­வு­வதை விடுத்து, அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பிரதிநிதி என்ற வகையில் அவர் சமூகத்திற்காக குரலெழுப்ப வேண்டும். இல்லாதபட்சத்தில் முஸ்லிம் சமூகத்தையும் அதன் பிரதிநிதிகளையும் கொண்டே, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ உரிமையாக காலங்காலமாக பேணப்பட்டு வந்த தனியார் சட்டத்தைப் பறித்தெடுக்கின்ற அரசாங்கத்தின் தந்திரோபாயத்திற்கு நீதியமைச்சரும் பலியாக வேண்டி வரும். அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க பிரார்த்திப்போமாக.- Vidivelli

3 comments:

  1. well said that is the true.

    ReplyDelete
  2. ஒரு நாட்டின் நிர்வாகியானவர் தனக்குப் பொறுப்பிக்கப்பட்ட மக்களில் ஒருவருக்காவது எவ்வித அநியாயமும் இழைக்காது நீதியாகவும் நியாயமாகவும் கௌரவத்துடனும் நடந்து கொள்ள வேண்டியது தர்மமாகும். தனக்குப் பொறுப்புச் சாட்டப்பட்ட ஒரு குழுவினருக்கு அநீதி இழைக்கும் நோக்கத்தோடு அக்குழுவினரில் இருந்தே ஒருவரைத் தலைவராகத் தேர்ந்து எடுத்து இவர் மூலமாகவே அவர்களின் கண்களைக் குத்த முயன்றால் அவர்கள் எவராக இருந்தாலும் இந்த இரு சாராரும் இறை தண்டனையில் இருந்து தப்பவே முடியாது. உலகம் அதனைப் பாரர்க்கவே போகின்றது
    It is Dharma that the ruler of a country should act justly, fairly and with dignity without inflicting any injustice on any of the people for whom he is responsible. If he chooses a leader from a group with the intention of doing injustice to a group for which he is responsible and tries to blindfold them, then neither of them can escape divine punishment. The world is going to watch it.

    ReplyDelete
  3. why others keeping silent?

    ReplyDelete

Powered by Blogger.