Header Ads



உண்மையான தேசப்பற்றாளர்கள் என்ற கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள மங்கள - சந்திரிக்காவின் மகனும் இணைவாரா..?


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வரான விமுக்தி குமாரதுங்க மிக விரைவில் இலங்கை அரசியலில் இறங்க உள்ளதாக தெரியவருகிறது.

இந்த செய்தி வெளியாகிய பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு மிக நெருக்கமான அரசியல் சகாவான மங்கள சமரவீர, நாளைய தினம் கொள்கை ரீதியான அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவுப்படுத்த உள்ளார்.

உண்மையான தேசப்பற்றாளர்கள் என கொள்கை திட்டத்தை அவர் நாளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளார்.

எதிர்காலத்தை நாட்டை பொறுப்பேற்க உள்ள இளம் சமூகத்தை கொள்கை ரீதியாக ஒன்றிணைக்கும் வகையில், இளைஞர், யுவதிகள் தலைமையில் இந்த உண்மையான தேசப்பற்றாளர்கள் கொள்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உண்மையான தேசப்பற்றாளர்கள் கொள்கை திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்து வரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நடு நிலையான கொள்கையை சமூகமயப்படுத்துவதே மங்கள சமரவீரவின் இலக்காக இருந்து வருகிறது.

விமுக்தி குமாரதுங்கவின் அரசியல் வருகை தயார்ப்படுத்தும் வகையில் மங்கள இந்த கொள்கை திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் நாம் இலங்கையர் என்ற கட்சியை ஆரம்பித்ததும் இந்த திட்டத்திற்காக எனவும் பேசப்பட்டு வருகிறது.

கடந்த பொதுத் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொண்ட மங்கள சமரவீர, இரண்டு ஆண்டுகளாக அமைதியான இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.