இன்றுமுதல் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளை, PHI யினர் மேற்பார்வை செய்யவுள்ளனர்
சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாது திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (23) முதல் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வை செய்யவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், சுகாதார விதிகளை பின்பற்றாது செயற்பட்டுள்ளமை தொடர்பான நிழ்படங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் கொரோனா ஒழிப்பிற்கான தேசிய செயலணியின் தலைவர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இந்த நிலையில், இனிவரும் நாட்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Post a Comment