நாமலுக்கு சார்பாக, குரல்கொடுத்துள்ள ஹரீன்
உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் அமைச்சர் மீது குற்றம்சாட்டுவது எப்போதும் பலரின் விருப்ப தேர்வாக காணப்படுகின்றது என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்;டின் தற்போதைய நிலைக்கு அவரை முழுமையாக குற்றம்சாட்டுவது சரியான விடயமல்ல என குறிப்பிட்டுள்ள ஹரீன் பெர்ணான்டோ முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் அமைச்சரால் எவ்வளவு தூரம் இந்த விடயத்தில் செயற்படமுடியும் என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
அணித்தேர்விற்காகவும் ஏனைய விவகாரங்களிற்காகவும் யாரையாவது குற்றம் சொல்லவேண்டுமென்றால் நாங்கள் தெரிவுக்குழுவினரை உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினரை முகாமையாளர்களை முதலில் குற்றம்சாட்டவேண்டும் எனவும் ஹரீன்பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் துரதிஸ்டவசமாக அனைவரும் அமைச்சரையே குற்றம்சாட்டுகின்றனர் என ஹரீன்பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
நான் எட்டுமாதங்கள் அமைச்சராகயிருந்தேன், நான் எவராலும் முடியாத சட்டத்தினை நிறைவேற்றி திலங்க சுமதிபால போன்ற ஊழல்வாதிகளை வெளியேற்றினேன் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது உயர்மட்ட குழு அமைச்சருடன் இணைந்து எங்கள் கிரிக்கெட்டிற்கு அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment