கொரோனா ஜனாஸாக்கள் உயருகிறது - மற்றுமொரு இடத்திலும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அவசர கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இக் இக்கூட்டத்திலே தவிசாளர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓட்டமாவடி மஜ்மா நகரில் கொரோனா உடல்கள் அதிகரித்துச் செல்வதைத் தொடர்ந்து நாம் ஆராய்ந்த போது கிரான் பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட சாப்பமடு எனும் பிரதேசத்தை அடையாளம் கண்டுள்ளோம்.
அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த இடத்தில் உடல்களை நல்லடக்கம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த மையவாடியில் புதன்கிழமை 28 ஆம் திகதி வரை 1170 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். -Vidivelli
Why ask for ONLY only one other place for Burial? Why not ask for places in ALL areas where Muslims live in this country?
ReplyDelete