Header Ads



ஒருவர் விட்ட பிழைக்காக ஏனைய சமூகத்தை, சீண்டாமல் தவிர்ந்து அமைதி காக்குமாறு கோரிக்கை


காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முகம்மது நபியை இழிவுபடுத்திய விவகாரத்தில் அறிக்கைகளை விடுவதையும், அவருக்கு எதிராகவும், ஏனைய சமூகத்திற்கு எதிராகவும் வன்சொற்களை விடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமூகத்தை சார்ந்த உறவுகளிடம் கேட்டுக்கொள்வதுடன் தீர ஆராய்ந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் தயாராகி வருவதாக அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு இன்று (31) கருத்து வெளியிட்ட அவர், முஹம்மது நபியையோ அல்லது இஸ்லாமிய வரலாற்றையோ யாரும் இழிவுபடுத்த விட முடியாது. அப்படி செய்யும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை. நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை நேற்றே எடுத்துளோம்.

ஆகவே யாரும் இந்த விடயத்தில் அவசரப்பட்டு ஒருவர் விட்ட பிழைக்காக ஏனைய சமூகத்தை சீண்டாமல் தவிர்ந்து இருந்து அமைதி காக்குமாறும் இந்த விடயத்தை தீர ஆராய்ந்து நடந்தவற்றை கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேலும் செய்ய அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் தயாராகி வருவதாகவும்  அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்  


1 comment:

  1. மௌலவிமார்கள் இப்படி வக்காலத்து வாங்கி வாங்கி நம்மை நாமே தாழ்த்தி சமூகத்தைக்காட்டிக்கொண்டே இருப்பீங்க.

    ReplyDelete

Powered by Blogger.