"ஜனாதிபதியுடன் கைகோர்த்து பிரதமர் முன்னெடுக்கும் சேவை வரலாற்றில் எப்போதும் அழியாததாகும்" - பஞ்ஞானந்த தேரர்
தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த அனுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான தலைமை சங்கநாயக்கர் பண்டிதர் நுகேதென்ன பஞ்ஞானந்த தேரரை பிரதமர் வரவேற்றார்.
பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் சகல பௌர்ணமி தினங்களிலும் அமாதம் சிசிலச தர்ம உபதேசத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தர்ம உபதேசத் தொடர் பல்வேறு தடைகள், இன்னல்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேரர் தனது உபதேசத்தின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டினார்.
“இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில், இந்த நாட்டின் உதவியற்ற மற்றும் துயரில் வாடும் மக்களின் துன்பங்கள் அனைத்தையும் நீங்கள் சுமந்துக்கொண்டு, இந்நாட்டில் எவருக்கும் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு பாரிய மாற்றங்களை கொண்ட யுகத்தை ஏற்படுத்தி, இன்று அந்த யுகத்தின் விடியலை அனுபவிக்கும் காலப்பகுதியில், முழு உலகமும் கொடிய தொற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரவு பகல் பாராது ஜனாதிபதியுடன் கைகோர்த்து முன்னெடுக்கும் இச்சிறந்த சேவையானது இந்த வரலாற்றில் எப்போதும் அழியாததொரு சேவையாகும்.
அத்துடன், அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர் நீங்கள்தான் என்பது எங்களுக்குத் தெரியும். முப்பது வருட கால யுத்தத்தை மூன்று வருடங்கள் மற்றும் சில மாதங்களில் வெற்றிகரமாக நிறைவுசெய்தீர்கள். அதேபோன்று எவரதும் கற்பனைக்கு எட்டாத அபிவிருத்தி செய்யப்பட்ட யுகம், எமக்கு கனவாக காணப்பட்ட நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் இந்த நாட்டின் ஏழை மற்றும் உதவியற்ற மக்களுக்கு செய்த பெரும் சேவை எப்போதும் எமது நினைவிலிருந்து அழிக்க முடியாது” என நுகேதென்ன பஞ்ஞானந்த தேரர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெற்ற 212ஆவது “அமாதம் சிசிலச” தர்ம உபதேச நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் C.B.ரத்னாயக்க, கௌரவ இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு
இது தர்ம உபதேசமா அல்லது ராஜபக்ஷ புகழ் மாலையா?
ReplyDelete