'43 ஆவது படைப்பிரிவு' வுடன் சம்பிக்க - தலைமைத்துவத்திற்கும் தயார் என்கிறார் - சஜித்துடன் விரிசலா...?
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் 43ஆவது படைப்பிரிவு பற்றி ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச 43ஆவது படைப்பிரிவில் ஈடுபடவில்லை.
ஆனால் 43ஆவது படைப்பிரிவின் பங்கு குறித்து ஏற்கனவே அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செயல்பாட்டை நாம் நம்பவில்லை.
எனவே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பொதுவான அரசியல் தளத்திற்கு தலைமைத்துவத்தை வழங்க 43ஆவது படைப்பிரிவு தயாராக உள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு மாற்றாக மாறும் தலைவர்களின் புதிய அமைப்பை உருவாக்குவதில் 43ஆவது படைப்பிரிவு ஈடுபட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உருமய போன்ற அரசியல் இயக்கங்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒரு பொதுவான மேடையில் சேர அழைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
43 படைப்பிரிவு என்பது ஒரு எண் அல்ல, ஒரு தலைமுறை என்ற கருப்பொருளின் கீழ் கட்டமைக்கப்பட்ட அரசியல் இயக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1943ஆம் ஆண்டு அமைச்சர் C.W.W.கன்னங்கரவினால் கொண்டு வரப்பட்ட இலவச கல்விக் கொள்கையால் பயனடைந்த மாணவர்களின் தலைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment