சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாவிட்டால் 4 ஆவது அலை 10 வாரங்களில் ஏற்படும் - Dr ஹேமந்த ஹேரத்
இலங்கையில் கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் நான்காவது அலை எதிர்வரும் 10 வாரங்களில் இலங்கையில் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையிலும் டெல்டா தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய வைரஸ் போன்று டெல்டா பரவினால் மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டு விடும்.
வைரஸ் பரவலை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய ஒரே நடவடிக்கையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். அத்துடன் பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மக்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை மீறி செல்வதற்கு இந்த வைரஸ் மாறுபாட்டிற்கு முடியாது. மக்களின் செயற்பாடு காரணமாகவே வைரஸ் வேகமாக பரவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரஸ் வேகமாக பரவினாலும் மக்கள் உரிய சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment