ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்க, 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு இராணுவ முகாமுக்குள் பயிற்சியளிக்க வேண்டும்
ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்காக, 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு இராணுவ முகாமுக்குள் பயிற்சியளிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை - ஹிரண பிரதேசத்தில் காவல் நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மையில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சி வழங்க வேண்டும் என நாடாளுமன்றில் தாம் கூறியதன் பின்னர், தம்மை சிலர் தூற்றியதாக அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ பயிற்சி என்பது, சிலர் விமர்சிப்பது போன்று இராணுவத்தினர் ஆவதற்கானதல்ல. எனினும், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு பயிற்சி வழங்க வேண்டுமாயின், இராணுவ முகாம் அதற்கு பொருத்தமான இடமாகும்.
அங்கு ஒழுக்கநிலை உள்ளதாலும், அதற்கான வசதிகள் உள்ளதாலும், தலைமைத்துவம் உள்ளிட்ட பண்புளை மேம்படுத்துவதற்கான ஏதாவது பயிற்சிநெறியை வழங்கினால், ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
another headache daily
ReplyDeleteMay God save this country
ReplyDeleteFrom evil n bad ruler.40years we struggled.