14 நாட்களுக்கு விமல் தனிமைப்படுத்தப்பட்டார் - அமைச்சின் காரியாலயமும் 14 நாள்களுக்கு மூடப்பட்டது
அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே, விமல் வீரவன்சவும் தனிமைப்படுத்தப்பட்டார்.
அத்துடன், அவரது அமைச்சின் காரியாலயமும் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவர், நேற்று (29) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அப்படியே நிரந்தரமாகத் தனிமைப்படுத்திவிட்டு நிரந்தரமாகவே காரியாலயத்தையும் மூடிவிட்டால் இந்த நாட்டு மக்களின் மூளைக்கு அது பெரிய ஓய்வாகவும் நிம்மதியாகவும் இருக்கும். அது பற்றி அரசு தீவிரமாகச் சிந்திந்து செயற்பட வேண்டும்.
ReplyDeleteகொரோனா இப்பத்தான் சரியான இடத்துக்கு போய் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDelete