Header Ads



கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை காண்பிக்கலாம் - ஆனால் அது உண்மை நிலவரமல்ல - PHI


கொரோனா நோயாளர்களின்  எண்ணிக்கையில் வீழ்ச்சியை காண்பிக்கும் புள்ளிவிபரங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகலாம் ஆனால் அது உண்மை நிலவரமல்ல என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தின் அடிப்படையில் தங்கள் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நோயாளிகளுடன் முதல்தொடர்பிலிருந்தவர்களை அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக  பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண  தெரிவித்துள்ளார்.

முன்னர் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டவுடன் அவருடன் தொடர்பிலிருந்தவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் சோதனையில் வைரஸ் கண்டுபிடிக்கப்படுவதற்கான திறன் பிசிஆர் சோதனைகளை விட குறைவு என்பதால் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு என்ற புள்ளிவிபரங்கள் வெளியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது உண்மையில்லை  ஆனால் முறை மாற்றத்தின் காரணமாகவே இந்தநிலை காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த கொரோனா விடயத்தில் யார் பெரிய ஆள்னு இன்னும் விளங்கமாட்டிக்குதே.

    ReplyDelete

Powered by Blogger.