அனைத்து மாணவர்களுக்கும் Online கல்வி, சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாடு
அனைத்து மாணவர்களுக்கும் Online கல்வி சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (28) முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டனர்.
02 வருடங்களாக மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment