Header Ads



இலங்கையின் மாணிக்கக்கல் வர்த்தகர், நிபால் இப்ராஹிம் தன்சானியாவில் மரணம் - இம்தியாஸ் Mp அனுதாபம்


பேருவலை சீனன் கோட்டையைச் சேர்ந்த அல்ஹாஜ் நிபால் இப்ராஹிம் நேற்று முன்தினம் தான்சானியாவில் காலமானார்.

இவரது திடீர் மறைவானது எனக்கு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது .

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இவர் என்னோடு நெருங்கிப் பழகியவர்.

எனது அரசியல், சமூக பணிகளில்  பல்வேறு வகைகளிலும் எனக்கு ஆதரவளித்து அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்.

சமூக நல பணிகளிலும் அரசியல் செயற்பாடுகளிலும்  துடிப்போடு ஈடுபட்டுவந்த இவர், ஒரு திறமையான வியாபாரியாவர்.

இலங்கையிலும் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் உள்ளடங்களாக பல நாடுகளுடன் வர்த்தக ரீதியான தொடர்புகளை பேணிவந்தார்.

இலங்கைக்குள் மாணிக்கக்கல் அகழ்விலும் மாணிக்க கற்கள் சந்தையில் தொடராக கிடைப்பதிலும் அவ்வப்போது ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து பேருவலை பகுதி வாழ் இரத்தினக்கல் வியாபாரிகளும் சர்வதேச ரீதியாக புதிய சந்தைகளை தேடிச்சென்றனர்.

மர்ஹூம் நிபால் அவர்களும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை தேடிச்சென்ற முன்னோடிகளில் ஒருவர்.

இவரது தந்தை மர்ஹூம் இப்ராஹிம் (சின்ன துரை) எனது தந்தை மர்ஹூம் பாக்கிர் மாக்காரோடு மிக நெருக்கமான தொடர்புகளை பேணிவந்தவர்.

அரசியல் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் எனது தந்தைக்கும் நெருக்கமாக இருந்தவர்.


மர்ஹூம் நிபால் அவர்கள், வியாபார ரீதியில் நிறைய சாதிக்கும் திறன் கொண்டிருந்தார்.

இவரது திடீர் மறைவானது அவரது குடும்பத்தினருக்கு மாத்திரமின்றி  சமூகத்திற்கும் பாரிய இழப்பாகும்.

No comments

Powered by Blogger.