Header Ads



முகக்கவசத்திற்கு (Mask) பதிலாக, பேஸ் ஷீல்டை (Face Shield) பயன்படுத்த முடியுமா..?



முகக்கவசத்திற்கு (Mask) பதிலாக பேஸ் ஷீல்டை (Face Shield) பயன்படுத்த முடியுமா? 

இல்லவே இல்லை

கொவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரிலிருந்து, ஆரோக்கியமானவர்களுக்கு கொவிட் வைரஸ் பரவுவதை குறைப்பதற்காகவே முகக்கவசத்தை அணிகின்றோம்.

முகக்கவசம் முகத்துடன் நன்கு பொருந்தும் நிலை மற்றும் முகக்கவசம் வைரஸ் கிருமிகளை எவ்வாறு வடிகட்டுகிறது என்பதை பொறுத்து முகக்கவசத்தினால் கிடைக்கும் உச்ச அளவு பாதுகாப்பு தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவரிற்க்கொருவர் ஒரு மீற்றர் தூரத்தை பேண கடினமாக உள்ள சந்தர்ப்பங்களில் முகக்கவசத்துடன், பேஸ் ஷீல்டையும் பயன்படுத்துவதால் மற்றொரு நபரிடமிருந்து வெளிவரும் துகள்கள் உங்கள் முகத்தில் விழுவதிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றீர்கள்.

உங்கள் முகக்கவசத்தின் மீது விழும் துகள்கள் மற்றும் வேறு மாசுக்களும் விழுவதை தடுப்பதற்காக பேஸ் ஷீல்டையும் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்.

முகக்கவசத்துடன், பேஸ் ஷீல்ட் பாவனை, இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார பணியாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடைமுறையாகும் ஏனெனில் நோயாளிகளின் துகள்களால் சுகாதார பணியாளர்களின் முகக்கவசம் மாசுபடுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

இருப்பினும், முகக்கவசத்திற்கு பதிலாக பேஸ் ஷீல்ட் பாவனை மட்டும் ஒருவரிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காததால் அதனை மட்டும் தனியாக பாவித்தல் பரிந்துரைக்கப்படவில்லை. 

கொவிட் -19 தொற்று நோய் பரவுவதைக் குறைக்க பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகளில் முகக்கவசத்தை அணிவதும் ஒன்றாகும், ஆனால் முகக்கவசத்தை மட்டும் அணிவதன் மூலம் கொவிட் -19 தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகையால், ஒருவரிற்க்கொருவர் ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் தூரத்தை பேணல் , சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் முகக் கவசத்தை அணிதல் போன்ற எல்லா சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தலாம்.

Health Promotion Bureau

No comments

Powered by Blogger.