CID க்கு முதன்முறையாக, பெண் பிரதிப் பணிப்பாளர் நியமனம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன், மகளீர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2007.11.03 ஆம் ஆண்டு பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துக் கொண்ட நிலையில் 14 வருடங்கள் சேவைக் காலத்தினை கொண்ட அதிகாரியாவார்.
Post a Comment