Header Ads



திருக்குர்ஆனை மனனம்செய்வதில் கடும் ஆர்வம்கொண்ட சுதைஸ் மரணித்துவிட்டார்


- Abu Saeed -

ஸமீம் மவ்லவியின் அன்பு மகன் சுதைஸ் மரணித்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்! கடந்து இரண்டு வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு, கடும் சோதனையில் வாடிய சுதைஸுக்கு வல்ல ரஹ்மான் உயர்ந்த சுவனத்தை வழங்கி விடுவானாக! என்று உளமாற பிரார்த்திக்கிறேன். 

திருக்குர்ஆனை மனனம் செய்வதில் கடும் ஆர்வம் கொண்ட சுதைஸ் தனது மரணம் வரை சுமார் 10 ஜுஸுக்களை ஹிப்ழ் செய்திருந்தார். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையில் உறுதியாகவே இருந்தார். பாசமாக பழக கூடியவராகவும் இனிமையாக பேசக் கூடியவராகவும் இருந்தார். 

இது அனைத்தையும் விட, தனக்கு மரணம் மிகவும் நெருங்கியிருந்ததை அறிந்தும் முகத்தில் புன் சிரிப்புடன், அனைவரும் மரணித்தே தீருவார்கள். அப்படி யாரும் காலாலாலம் உயிர் வாழ்வதாக இருந்தார் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பார்கள். அன்பு நபியே மரணித்து விட்டார். எனவே நான் மரணத்திலிருந்து விதிவிலக்கு பெறுவேனா? என்று தனது தந்தையிடம் கேட்டிருந்தார். 

இத்தகைய சிறு வயதிலேயே இவ்வளவு ஆழமான இறை நம்பிக்கையுடனும், கொள்கை உறுதியுடனும் வாழ்ந்த ஒரு சிறுவனை ,என் வாழ் நாளில் எனது மகனுக்குப் பிறகு முதல்  தடவை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 

சுதைஸ் மீது அதிகம் பாசம் வைத்திருந்தேன், ஒரு முறையாவது சென்று பார்த்து கட்டியணைத்து முத்தமிடவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முடியவில்லை. அவரது பிரிவு என்னை அதிகம் கவலையில் ஆழ்த்துகிறது.

எனது மகனுக்காக நான் பிராரர்த்திக்கும் போதெல்லாம் மகனே நீயும் என் நினைவில் வருவாய்.

6 comments:

  1. Ya Allah ! grant him loftiest stations in jannathul Firdouse and solace to his bereaved father! Aameen.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஹுன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஹுன்

    ReplyDelete
  4. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  5. Innalilahi vainna ilahi rajeeun :(..

    ReplyDelete
  6. inna lillahi waenna ilaihi raajioon
    سيمنحه الله الجنة

    ReplyDelete

Powered by Blogger.