ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியினை, சிங்களவர் புரிந்துகொண்டது போல தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் - பொடியப்பு பியசேன
அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களின் தேவையுணர்ந்து அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. இலங்கையிலுள்ள பிரதேச சபைகளின் ஊடாக அனைத்து வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வாழ்வாதாரம் இழந்து நிற்கும் கொரோனா சூழ்நிலையில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு, ஒரு இலட்சம் அரச வேலை வாய்ப்பு, வடிகானுடன் கூடிய கார்ப்பட் தெருக்கள், கிராம மக்களுக்குத் தேவையான பயிர், கால்நடை வளர்ப்பு உட்பட வாழ்வாதார உதவித் தேவைகள் என்பவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறது. வீட்டுத் திட்டங்களுடன் குறிப்பாக சமூக நலனோம்புத் திட்டங்களை பாரியளவில் முன்னெடுத்து வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் செயலக தரமுயர்வு என்பவற்றுக்கு முழுமையான தீர்வு கிடைத்தால் கூட்டமைப்புக்கு அரசியல் செய்ய எதுவும் இல்லை என்ற நிலையும் காணப்படுகிறது. நாடு கேட்டு தமிழினமே அழிந்த நிலையிலுள்ளது. தமிழினம் பின்னடைவில் இருப்பதற்கு பின்னணியானவர்கள் கூட்டமைப்பினரே.
மேலும், 12000 தமிழீழ விடுதலைப் புலிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த அரசாங்கத்திற்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது பெரிய காரியம் கிடையாது. தமிழரசியல் கைதிகள் முற்று முழுதாக விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு கூட்டமைப்பினரே பின்னணியானவர்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க முயற்சிக்கும்போது, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் எதிர்கால அரசியல் பறிபோகலாம் என்று குழப்பமடைந்ததையும், கூட்டமைப்பு பிச்சைக்காரனின் காயத்தை அடிப்படையாக வைத்து இற்றைவரை அரசியல் செய்வதையும் காணலாம் என்றார்.
69 இலட்சம் மக்களும் விளங்கியவாறு இந்த நாட்டில் வாழும் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் எதையும் சரியாக விளங்கும் தன்மை குறைந்தவர்கள். அதுதான எல்லாப்பிரச்சினைகளுக்கும் அடிப்படை. அந்த விளக்கம் என்பதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வடக்கு கிழக்குக்கு வழங்கினால் அந்தப்பிரச்சினையைத் தீர்க்கலாம்.
ReplyDelete😄😄😄😄😄😄😄😄😄
ReplyDeleteAdai Lusu peyasena,
ReplyDelete