Header Ads



பயணக் கட்டுப்பாடு இன்னும் சில காலத்திற்கு நீடிக்கப்பட வாய்ப்பு - இராஜாங்க அமைச்சர்


பயணக் கட்டுப்பாடு இன்னும் சில காலத்திற்கு நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.