ஈரானிற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் – மனம்திறந்த மொசாட்டின் முன்னாள் தலைவர்
ஈரானில் நடான்ஜில் நிலத்திற்கு அடியில் அமைந்திருந்த சென்ரிபியுஜ்களை இஸ்ரேல் குண்டுவைத்து தகர்த்தது,என தெரிவித்துள்ள ; யொசிகொஹென் ஈரான் தலைநகரில் உள்ள பண்டகசாலையிலிருந்துஈரானின் அணுவாயுத நடவடிக்கைகள் குறித்த முக்கிய ஆவணங்களை அகற்றி மொசாட் இஸ்ரேலிற்கு கொண்டு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கு பொறுப்பாகயிருந்த விஞ்ஞானியை இஸ்ரேலே படுகொலைசெய்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
நீண்ட நாட்களாக எங்கள் இலக்காக அவர் காணப்பட்டார் ஈரான் அணுவாயுதங்களை பெறுவதை எப்பாடுபட்டாவது தடுப்போம் என இஸ்ரேல் தெரிவிப்பதன் அர்த்தத்தினை ஈரான் விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் சனல் 12ன் பத்திரிகையாளர் இலான் டயானிற்கு வழங்கியுள்ள பேட்டியில் மொசாட்டின் தலைவர் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் குறித்து தனக்கு நன்கு தெரியும் அவை அமைந்துள்ள இடங்கள் குறித்து தனக்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கிடைத்தால் ஈரானின் நடான்ஸ் அணுஉலை அமைந்துள்ள பகுதிக்கு பத்திரிகையாளர் அழைத்துசெல்ல தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
நட்டன்ஸில் ஏற்பட்ட வெடிப்புகளிற்கு இஸ்ரேலே பொறுப்பு என வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் அணுவாயுதங்களை உருவாக்குவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என ஈரானிற்கு நாங்கள் தெரிவித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நட்டான்சில் இடம்பெற்ற இரு வெடிப்பு சம்பவங்களிற்கு இஸ்ரேலிய புலனாய்வு பிரிவான மொசாட்டே காரணம் என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள என்பதை சுட்டிக்காட்டியுள்ள யொசி கொஹென் சென்ரபியுஜஸ்களை சமப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பளிங்கு தளத்தினை உருவாக்கும்போது பெருமளவு வெடிபொருட்களை சேர்த்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்புசம்பவங்களிற்கு பொறுப்பான நபர் வெடிமருந்து கலக்கப்படட பளிங்கு தளம.
ஈரானிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்தார் அதன் மேல் சென்ரபியுஸ்கள் பொருத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அந்த தளத்தினை நட்டன்சில் பொருத்தினார்கள் அவர்களிற்கு அதற்குள் வெடிமருந்துகள் இருந்தது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவிஞ்ஞானி கொலை செய்யப்பட்டமை ஈரானின் அணுவாயுததிட்டத்தின் தந்தை என வர்ணிக்கப்பட்ட பக்ரிசாதே 2020 நவம்பரில் டெஹ்ரானிற்கு அருகில் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறித்தும் மொசாட்டின் முன்னாள் தலைவர் யொசி கொஹென் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலிற்கு இஸ்ரேலே காரணம் என பெரிதும் கருதப்படுகின்ற நிலையில் மொசாட்டின் தலைவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக நாங்கள் அவரை கண்காணித்தோம் என தெரிவித்துள்ள அவர் அவரிற்கு அருகில் மொசாட் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஈரான் விஞ்ஞானி எங்களிற்கு அதிகளவு பிரச்சினையாக காணப்பட்டார்என தெரிவித்துள்ள கொஹென் அவரை பற்றி இஸ்ரேல் பல வருடங்களாக தகவல்களை சேகரித்து வந்தது எனவும் தெரிவித்துள்ளார். Thinakkural
Post a Comment