அமைச்சரவையில் மாற்றம், சிலரின் அமைச்சுக்கள் பறிபோகலாம் - சண்டேடைம்ஸ் பத்திரிகை தெரிவிப்பு
சண்டே டைம்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
ரணில்விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற நுழைவிற்கு 24 மணித்தியாலத்தின் பின்னர் மேலும் பல அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டன.
பசில்ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்,
அவர் ஜனாதிபதி செயலணிக்கு தலைமை வகிக்கின்றார் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
அவரை விமானநிலையத்தில் அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க நிமால்லான்ச உட்பட அதிகாரிகள் குழுவினர் வரவேற்றனர்.
அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ராஜபக்ச தீவிரமாக ஆராய்ந்துள்ளதன் பின்னணியிலேயே பசில் ராஜபக்சவின் விஜயம் இடம்பெற்றுள்ளது.
முக்கிய அமைச்சரவை பதவிகளை ஒன்றை பெறவுள்ள பசில் ராஜபக்சவுடனும் பிரதமருடனும் ஜனாதிபதி இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளார்.
இது அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னரான நடவடிக்கை என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன
திறமையாக செயற்படாத அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திறமையின்மைக்கு அப்பால் சில அமைச்சர்கள் ஊழல்மற்றும் தவறான நடத்தை குறித்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
அமைச்சரானதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு நிவாரணம் வழங்குவது குறித்த திட்டங்களை வகுப்பதே பசில் ராஜபக்சவின் முக்கிய நடவடிக்கையாக அமையும் என சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment