சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே போன்ற திறமையுடைய ஒருவரே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தலைமை தாங்க வேண்டும் - சுமந்திரன்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளேயிற்கு முக்கிய இடத்தை ஏன் அரசாங்கம் வழங்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே போன்ற திறமையுடைய ஒருவரே கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க வேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் அவர் நிபுணத்துவம் மிக்கவர் என்ற போதிலும்- கொவிட் விவகாரங்களிற்கான அமைச்சர் என்கின்ற போதிலும் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிக்கும் எதனையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு விடயம் குறித்து எச்சரித்த வேளை அரச தலைமை கொறடா அவர் மன அழுத்தத்திற் குள்ளாகியுள்ளார், அவரை உளநல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடியவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் வெளிநாட்டு இராணுவத்தை எதிர்த்துப் போரிடுவதைப் போல போரிடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதிக்கு என்ன தெரியும்? சட்டத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment