Header Ads



எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட, பாதிப்பு குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கை


தீக்கிரையான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 உபகுழுக்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நீதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

காப்புறுதி, நீதித்துறை, மீனவ, சுற்றாடல் மற்றும் பொருளாதாரம் ஆகிய ஐந்து பிரிவுகளில் இதற்காக உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன்படி உபகுழுக்களுக்கு உட்பட்ட துறைசார் வல்லுநர்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல் வழங்க முடியும்.

0112 44 54 47 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அல்லது reforms@mog.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர், கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்களை வழங்கமாறு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.