"மோதுவது என்று எண்ணிக்கொண்டு வந்தால், ரணிலுக்கு மோத முடியாது என நினைவூட்ட விரும்புகிறேன்"
1977 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தவர் என்பதால், அடிவருடிகள் கூறுவது போல் உரையாற்றவும் வேலைகளை செய்யவும் வேண்டாம் என ராஜித சேனாரத்ன, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறுதிக்காலத்தில் முக்கியமாக புகழை தரக் கூடிய வித்தில் செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கடந்த காலங்களில் செய்த தவறுகள் அழிந்து போகும் விதத்தில் நற்பெயரை சம்பாதித்து கொள்ளுமாறு யோசனை முன்வைக்கின்றோம். இதனை விடுத்து மோதுவது என்று எண்ணிக்கொண்டு வந்தால், மோத முடியாது என்பதை ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
50 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியுடன் தனித்து மோத முடியாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அண்மையில் வந்தவர்கள் கூறும் விதத்தில் செயற்பட மாட்டார் என நம்புகிறோம்.
54 பேர் இருக்கும் இடத்திற்கு வேறு கட்சியில் இருந்து ஒருவர் வந்தால், அவரை தலைவர் எனக் கூறும் அளவுக்கு தலையில் சுகவீனத்தை ஏற்படுத்தும் தொற்று நோய் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள எவருக்கும் இல்லை எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Actually, this sort of views or arguments are not necessary at the moment. Work together for the development of the country.
ReplyDeleteஎன்ன சேர் உலகம் புரியாம பேசிறிங்க.
ReplyDeleteஉங்களையெல்லாம் மீறி 20 க்கு கையை உயர்த்திய எங்களுக்கு எங்க பழைய பிரதமருக்கு ஆதரவாக கையை உயர்த்துவது என்ன பெரிய வேலையா