Header Ads



கம்மன்பிலவிற்கு ஆதரவாக வாசுதேவ - ஏனைய அமைச்சர்களும் ஆதரவளிப்பர் என்கிறார்


எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்காக  அமைச்சர் உதயகம்மன்பில பதவி விலகவேண்டும் என பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடுமையாக கண்டித்துள்ளார்.

நானும் வேறு பல அமைச்சர்களும் இந்த விடயத்தில் அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு ஆதரவளிக்க  தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உதயகம்மன்பில பதவி விலகவேண்டும் என பொதுஜன பெரமுனவின்  பொதுசெயலாளர் விடுத்த வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அமைச்சர்கள் பலர்  அமைச்சர் விமல்வீரவன்சவின் தலைமையில் கூடி ஆராய்ந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.